வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன !

31 0

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) ஆம் திகதி சுதந்திரமாகவும் அமைதியாகவும் நிறைவடைந்துள்ளது.

இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 38 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில்  13, 421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது.

22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3,151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41,553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.