இந்த வருடத்துக்கான மதிப்பீடு அடிப்படையில் புள்ளி வழங்கும் கொரிய மொழி நிபுணத்துவ சோதனை இந்த மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த முறை சோதனையை கணினி நுட்பம் ஊடாக மாத்திரம் நடத்தவிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.
இந்த சோதனைக்காக 22ஆயிரத்து 888 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் 16 ஆயிரத்து 431 பேர் உற்பத்தி பிரிவுக்கும், 6 ஆயிரத்து 457 பேர் மீன்பிடித்துறைக்கும் விண்ணப்பித்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.