ரணில் வென்றால் பாராளுமன்றம் கலைக்கப்படாது – பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்

65 0

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெல்லும் பட்சத்தில் ஒன்றரை வருடங்களுக்குப் பாராளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் நம்பிக்கை உள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்தார்.

இன்று வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தனது வாக்கைப் பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் அதிக அளவில் வாக்கு அளிப்பதில் ஆர்வம் கொண்டு செயல்படுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க வெல்லும் பட்சத்தில் பாராளுமன்றம் ஒன்றரை வருடங்களுக்குக் கலைக்கப்படாது எனவும் தெரிவித்தார்.