வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் மஸ்தான் வாக்களித்தார்

64 0

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தியிருந்தார்.