முப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை!

266 0

கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30,000 கிலோ வெல்லத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பனை வெல்லங்களை மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்து வருகின்றனர். கடந்த வருடம் அதிகூடிய வெல்லங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்திருந்தனர். தற்போது மக்கள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகளவில் காணப்படுகின்றது.

இதனால் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக பனை வெல்லங்களை மக்கள் அதிகப்படியாக கொள்வனவு செய்வதாகவும், உள்ளூர் மக்கள் மாத்திரமன்றி வெளிநாடுகளில் வாழும் மக்களும் வெல்லங்களை கொள்வனவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.