துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (20) சென்ற டொன் பிரியசாத் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் விதித்த வெளிநாட்டு பயணத் தடை காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
டொன் பிரியசாத் என அழைக்கப்படும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு 8.35 மணிக்கு துபாய்க்கு செல்லவிருந்த EK-653 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் விதித்த வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாக, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6 ஆவது பிரதிவாதியாக டொன் பிரியசாத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.