இரத்தினபுரி, நிவித்திகல பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளரின் ஒருவரின் பெண் ஆதரவாளரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 06 பேர் வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி அங்கிருந்த 03 வாக்காளர் அட்டைகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஆதரவாளர் இது தொடர்பில் நிவித்திகல பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் ஆதரவாளர் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் இந்த வீட்டை சுற்றி வேறு வீடுகள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.