
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
விளாவட்டவான் கிராம சேவகர் பிரிவில், யாட் வீதியில் உள்ள காணி அருகில் இருந்து இக் குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.
இன்று வெள்ளிக்கிழமை (20) பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக இவ் இரண்டு கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாண்டியடி விஷேட அதிரடிப்படையினர் .குறித்த இரண்டு குண்டுளையும் மீட்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.