அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிறது. செல்வசெழிப்புமிக்க அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதை அமெரிக்கர்கள் சரிவர பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர். இந்த தகவல் சமீபத்தில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் 5,886 கோடி கிலோ எடையுள்ள உணவு பொருட்களை இங்கு வாழும் மக்கள் வீணடிக்கின்றனர். அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.11 லட்சம் கோடி (160 மில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் வீணாவது குறித்து அமெரிக்க அரசு கவலைப்படுகிறது. எனவே அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு மீறி உணவு பொருட்கள் தயாரிப்பதால் சாப்பிட முடியாமல் காலாவதி ஆகிறது. இதனால் 70 சதவீதம் பொருட்கள் குப்பையில் வீசப்படுகின்றன.
அதே நேரத்தில் உணவு பொருட்கள் வீணாவதால் பணமும் வீணாகிறது என 42 சதவீதம் பேர் வருத்தப்பட்டதும் சர்வேயில் கண்டறியப்பட்டது.