குப்பை கொட்டுவதற்கு எதிராக இன்றும் பேராட்டம்; 06 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

260 0

கொழும்பு பிரதேசத்தில் ஒன்றுசேர்கின்ற தின்மக் கழிவுகளை வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக தற்போது போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

பிரதேசத்தைச் சேர்ந்த மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

இதேவேளை கடந்த 19ம் திகதி பிலியந்தலை, கரடியான பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளிட்ட 06 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் ஒன்றுசேர்கின்ற தின்மக் கழிவுகளை பிலியந்தலை, கரடியான பிரதேசத்தில் உள்ள குப்பைகூடத்தில் கொட்டுவதற்கு கடந்த 17ம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கடந்த 19ம் திகதி பாதைகளை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை கூறத்தக்கது.

அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 24ம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.