7 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற களவாடல் சம்பவம் ஒன்று தொடர்பில், இலங்கைப் பெண் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்தப் பெண் 7 ஆண்டுகளுக்கு முன்னர் டுபாயில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது, அவரது தொழில் தருனரின் வீட்டில் இருந்து பெறுமதியான பொருட்களை களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் டுபாய் காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஏழுவருடங்களின் பின்னர் அவர் மீண்டும் டுபாயில் வேறொரு தொழில் தருனரிடம் பணிப்பெண்ணாக இணைய சென்றுள்ளார்.
இதன்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் வைத்து மறுத்துள்ளார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ம் திகதி வழங்கப்படவுள்ளது.