நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கமாட்டேன்

13 0

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“சிலர் பல்வேறு விடயங்களைக் குறைப்பதாக கூறுகிறார்கள். அரசியல் வாக்குறுதிகள் பற்றி மக்களுக்கு தெரியும். இதுபோன்ற விசித்திரக் கதைகளை மக்கள் கேட்டிருக்கிறார்கள். அரசியல் மேடையில் கோமாளியை தேடும் தேர்தல் அல்ல இது. எங்களின் தேர்தல் அறிக்கையில் முடியாதது எதுவுமில்லை” என்றார்.