சுற்றுலாச் சென்ற பஸ் விபத்து ; மாணவர்கள் சிலர் காயம்

60 0

கம்பளை  – நுவரெலியா வீதியில் பலகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாச் செல்வதற்காகப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தூணில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, பயணித்த மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் உடல் நிலைமை கலவைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.