நுவரெலியாவில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் பொறித்த தீப்பெட்டிகள் விநியோகம்

27 0
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம்  மற்றும் தேர்தல் சின்னம் பொறித்த தீப்பெட்டிகளை  குழு ஒன்று நுவரெலியாவில் விநியோகித்ததாக பெப்ரல் அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.