நிட்டம்புவ பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

22 0

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகொட பிரதேசத்தில் நேற்று (16) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக வதுப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.