கிளப் வசந்தவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

41 0

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

அளுத்கம தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளப் வசந்தவை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் KPI  என்ற பாதாள உலக கும்பலின் அடையாளத்தை அச்சிடுவதற்கும் துப்பாக்கிக்தாரிகளை காரில் அழைத்து செய்வதற்கும் உதவி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.