கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

30 0

கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிராண்ட்பாஸ்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   நவகம்புர பகுதியில் 17 கிராம் 890 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மோதரை தொடர்மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து 10 கிராம் 670 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, தெமட்டகொடை பகுதியிலிருந்து 11 கிராம் 211 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.