மக்கள் விரும்பும் மாற்றம் எம்மிடம் உள்ளது

9 0

மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

இன்று (17) யட்டியாந்தோட்டை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த நாட்டில் ஊழல் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த நாட்டின் அப்பாவி மக்கள் இனியும் பாதிக்கப்பட முடியாது. அதற்கு நீங்கள் மாற்றம் கேட்டீர்கள். அதனால்தான் 225 பேரையும் வேண்டாம் என்றீர்கள்.

என்றாவது ஒரு நாள் இந்த நாட்டை சரி செய்ய முடியும் என்று அரசியல்வாதிகள் நம்புவதற்கு நாங்கள் உதவினோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு துரோகம் செய்தார்கள்.

சொத்து அறிவிப்போடு அரசியலுக்கு வந்தேன். மற்ற வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர். முதல் மூவரின் வருமானம் 2 இலட்சம் ரூபாவுக்கு குறைவாகும்.

நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பேற்று இந்த புதிய அரசியலை செய்கிறோம். நீங்கள் விரும்பிய இலங்கையை எவ்வாறு உருவாக்குவது என்பது எமது மூலோபாய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று அதை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட யாராலும் சொல்ல முடியாது.

எனவே இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையர்களை ஒன்று திரட்டி பயணத்தை ஆரம்பித்தோம். நீங்கள் தேடும் வித்தியாசத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம்.

இந்த நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.

அனைத்து வேட்பாளர்களும் அழைக்கப்பட்ட பொது மேடைக்கு யாரும் வரவில்லை. நான் எனது கூட்டங்களை ரத்து செய்துவிட்டு சரியாக 3 மணிக்கு அமர்ந்தேன். சஜித் வரவில்லை. அனுர வரவில்லை. நாமல் வரவில்லை. பின்னர் அவர்கள் மூவரும் ஒரு கடையில் தேநீர் குடித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் வந்தால்தான் நான் வருவேன், இவர் வந்தால்தான் அவர் வருவார் என ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.