நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

36 0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் நாளை (18) நடைபெறவுள்ளன.

அதன்படி, நாளை கொழும்பு நகரம், கொட்டாவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரச்சார கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விசேட போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.