பேருவளை-கரந்தகொட பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 258 கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதான நபர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்