சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்களிற்கு அருகில் மேற்கொள்ளப்படும் மீள் புத்தாக்க மின்னுற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.
தற்போது சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் 340 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றது.
இதனை 550 மெகாவோட்டாக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் சிறு நீர்மின் உற்பத்தித் துறைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சூழல் பாதிப்பற்ற வகையிலான மின்னுற்பத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்னுற்பத்தித்துறையில் நவீன தொழிநுட்பப் பயன்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.