நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா 2024நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா14-09-2024 சனி அன்று நியூவகெயின் நகரில் வெகு சிறப்பாகநடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில் ஒலிம்பிக்சுடர் ஏற்றப்பட்டு நெதர்லாந்துக் கிளைச்செயற்பாட்டாளர்களால் மைதானத்தைச்சுற்றி எடுத்துவரப்பட்டு இளையோரமைப்பினரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நெதர்லாந்துத் தேசியக்கொடியும் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம்
மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் 10.40 மணியளவில் உதைபந்தாட்டம் ஆரம்பித்தது. தொடர்ந்து சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் ஆண்கள் பெண்களிற்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன. மக்கள் மகிழ்ச்சியுடன் கரவொலி செய்ய சிறுவர்கள் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் போட்டிகளிலே பங்கேற்றனர். அத்துடன் எமது தாயக விளையாட்டான தாச்சிப்போட்டியும் மிகவும் விறுவிறுப்புடனும் சிறப்புடனும் நடைபெற்றது. மக்களின் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும்
நடைபெற்ற இந்த விளையாட்டுத் திருவிழா வெற்றிபெற்ற வீரர்களிற்கு வெற்றிக் கேடையங்களும் வெற்றிப்பதக்கங்களும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 19.30 மணியளவில் தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய இனிதே நிறைவெய்தியது.