அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை வெளியேறும் பகுதிக்கு அருகில் நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) காலை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபரிடம் இருந்து 14 அடி நீளமுள்ள இரண்டு செப்பு கேபிள்கள் மற்றும் கேபிள்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் களனி – வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.