மக்கள் கோரும் மாற்றத்தை வழங்க தயார் – திலித்

13 0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதான வேட்பாளர்களும் இலங்கை மக்கள் கோரும் மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்

மேலும், தான் ஒரு நபரை மையமாகக் கொண்ட அரசியல்வாதியல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “இலங்கை சமூகம் உளவியல் ரீதியாக கோரிய மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் பின்னணியை இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் எதிர்நோக்குகிறோம்.

எப்படிப் பார்த்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் கேட்கிறார்கள். அந்த அதிகாரத்தின் சதவீதத்திற்குள் அழிவுக்கான அதிகாரங்களும் உள்ளன. ஆனால் அந்த அரசியல் அணுகுமுறைகள் எதுவும் இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை சொல்லவில்லை, அவர்களுக்குத் தெரியாது. மக்களுக்கு வெறுப்புதான் உருவாகியுள்ளது. அவர்களின் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை அறிய விரும்புகிறார்கள்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மாற்றத்தின் ஊடாக நாட்டிலுள்ள முச்சக்கரவண்டி தொழில்முனைவோரின் வாழ்க்கைத் தரம் மாறும், அவர்களின் வருமானம் அதிகரிக்கும், அவர்களின் வாழ்வாதாரம் உயரும், சிறந்ததொரு சமுதாயம் உருவாகும்.

அதனால்தான் திலித் ஜயவீர, ஒரு நபரை மையமாகக் கொண்ட அரசியல்வாதி அல்ல. நம்பிக்கையின் அடிப்படையில் வேலை செய்பவர், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இங்கு வந்தவர், எனவே, இந்த கருத்தின் அடிப்படையில் நாம் முன்னேற முயற்சிக்க வேண்டும்.

அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்தோம். இது குறித்து விவாதிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. யோசியுங்கள், படியுங்கள், கேள்வி கேளுங்கள், ஏன் என்று சிந்தியுங்கள், ஒரு கணம் சிந்தியுங்கள். எனவே, நீங்கள்தான் நட்சத்திரம், இந்த நாட்டு மக்கள்தான் நட்சத்திரம், இந்த நட்சத்திரத்தை வெல்ல நீங்கள் நட்சத்திரமாக இருக்க வேண்டும்.” என்றார்.