தமிழ் பொது வேட்பாளரை சந்தித்த மாவைசேனாதிராசா !

35 0
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் , அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலையமுதனும் பொது வேட்பாளரை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை , யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் பிரச்சார மேடையில் ஏறி தமது ஆதரவை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.