ஜனாதிபதி தேர்தலில் தென்பகுதி வாக்காளர்கள் அதிகளவிற்கு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கே ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார கொள்கை நிறுவகம் தெரிவித்துள்ளது.
தென்பகுதியில் அனுரகுமார திசநாயக்க சஜித்பிரேதாசவை முந்துகின்றார்,வடமேல் மாகாணத்தில் மாத்திரம் சமநிலை காணப்படுகின்றது என சுகாதார கொள்கை நிறுவகம் தெரிவித்துள்ளது.
வடக்குகிழக்கில் சஜித்பிரேமதாச முன்னிலையில் காணப்படுகின்றார் என சுகாதார கொள்கை நிறுவகம் தெரிவித்துள்ளது.