அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவுகோரி வவுனியாவில் விசேட கலந்துரையாடல்!

36 0

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவு கோரி நேற்று வவுனியாவில் புத்தி ஜீவிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரட்ணாயக்க கலந்து கொண்டிருந்தார்.

வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை ஏழு முப்பது மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.