வெயாங்கொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

39 0

கம்பஹா, வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வதுரவ பிரதேத்தில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.

வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்யவது தொடர்பான விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.