மத்திய இஸ்ரேலில் முதல்முறையாக ஏவுகணைத் தாக்குதல்

69 0

“ஏமன் நாட்டில் மையம் கொண்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் மத்திய பகுதிகளின் மீது நேற்றைய தினம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் மத்திய பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். காசா போருக்கு மத்தியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகினர்.

கடந்த ஜூலை 19 அன்று இஸ்ரேலின் அமெரிக்க தூதரகம் அருகே நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதிகளின் துறைமுகத்தை இஸ்ரேல் தாக்கி சேதப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹவுதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை பொழிந்துள்ளனர்ஏமனில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மையப் பகுதி மீது ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் வான் பரப்பிற்குள் வந்த ஏவுகணையை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தாக்கியது. ஆனாலும், ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறின. மேலும், ராக்கெட்டுகளும் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதனால், இஸ்ரேலின் மோடின்[Modiin] ரெயில் நிலையத்தில் பாதிப்பு எற்பட்டது. மேலும், பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

Footage showing what appears to be several attempted Interceptions by the Israeli Air Defense Array, of the Medium-Range Ballistic Missile launched from Yemen against Central Israel. pic.twitter.com/7GgEQgGSmr— OSINTdefender (@sentdefender) September 15, 2024 Yemen’s Houthis have hit central Israel with a missile for the first time, and have vowed that they will launch more strikes in solidarity with the Palestinians.Nine Israelis were injured with minor wounds pic.twitter.com/H6HmGdo4xC— TRT World (@trtworld) September 15, 2024 இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த ஏவுகணை தாக்குதலில் காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு எமன் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.