இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் (X) தளத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார். சர்வதேச ஜனநாயக தினமான இன்றையதினத்தில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தேர்தல்கள் மூலம் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருப்பதை உறுதிசெய்கிறோம்.
இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை எனவும் குறித்த பதிவில் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் மேற்படி கருத்துக்களை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.