அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்திட்டத்தினை நிச்சயம் இரத்து செய்வோம் – அனுரகுமார

24 0

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்தியாவின் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்திட்டத்தினை இரத்துசெய்வேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஊழல்மிகுந்தது இலங்கையின் நலன்களிற்கு எதிராக செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு யூனிட்டிற்கு என்ற அடிப்படையில் அதானியிடமிருந்து  மின்சாரத்தினை கொள்வனவு செய்கின்றது,அதேநேரத்தில் இலங்கை நிறுவனம் என்ற அடிப்படையில் மின்சாரத்தை வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனத்தின் திட்டம் அளவு பெரியது என்பதை கருத்தில் கொள்ளும் போது அதன்செலவீனங்கள் குறைவாகயிருக்கவேண்டும்,ஆனால் அதற்கு மாறானா நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க நாங்கள் இந்த ஒப்பந்தத்தை நிச்சயமாக இரத்துச்செய்வோம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் மன்னார் பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினை அதானி கிரீன்ஸ்; நிறுவனம் முன்னெடுப்பதற்கு 2023 பெப்ரவரியில் இலங்கையின் முதலீட்டு சபை அனுமதி வழங்கியது.

இதன் பின்னர் இந்த திட்டம் சட்டசவால்களை எதிர்கொண்டுள்ளது.