முன்னாள் ஜனாதிபதிகள், அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தலைவர்கள் எனப்பலரும் ஆசீர்வாதம் பெற்ற அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்ற பெண்ணிற்கு பெருந்தொகை பணம் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அந்த அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ‘ஞான அக்காவின் வீடு, கோவில் மற்றும் ஹோட்டல் என்பன கடந்த போராட்டத்தின் போது 2022 மே 10 ஆம் திகதி சில குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் அரசாங்க மதிப்பீட்டாளரால் வழங்கப்பட்ட இரகசிய மதிப்பீட்டு அறிக்கையின் பெறுமதியின் அடிப்படையில் இழப்பீடு அலுவலகம் 2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கியுள்ளதாக அலுவலக தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஞானக்காவின் வீட்டிற்கு பல்வேறு பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் பலர் வருகை தந்திருந்த நிலையில், ஹோட்டலுக்கும் கோவிலுக்கும் பணம் செலுத்தப்படவில்லை என அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.