சிறுவர்களையும் பெண்களையும் வலுவூட்டும் செயற்திட்டம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)

271 0

சிறுவர்களையும் பெண்களையும் வலுப்படுத்தம் செயற்திட்டம் ஒன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் மகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி  ‘சிறுவர்களை நோக்கிய சமூக அபிவிருத்த்திட்டம்’ என்னும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வட மாகாண இணைப்பாளர் ஏபிரகாம் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்துகொண்டார்.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கே.என்.எச்.என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் 4 இலட்சத்து 25 ஆயிரம் யூரோ நிதிப்பங்களிப்புடன் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்த ஐந்து வருட அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் கே.என்.எச் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.விமலன், ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் மகேஸ் டி மெல், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தார் சின்னக்க்குளம், மகாறம்பைக்குளம் கிராம அலுவலர்கள், பெண்கள் அமைப்புக்கள் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.