நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க அனுமதி

32 0

இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம்  காலநிலை மாற்றத்தினால் நீர்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

100 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியில்  நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத்  திட்டம் இரண்டு துணைத் திட்டங்களை கொண்டுள்ளது.

முதலாவது திட்டம்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு  தேசிய கொள்கைகள் மற்றும் உத்திகளை நிறுவும்.  இரண்டாவது திட்டம் மேம்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதை ஆதரிக்கும்  என தெரிவிக்கப்படுகிறது.