ஹற்றனில் மரம் ஒன்று வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன(காணொளி)

266 0

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் சின்ன வேவாகொல பகுதியில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த இளவம்பஞ்சு மரம் நேற்று முன்தினம் முறிந்து வீழ்ந்ததால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதன்போது, சிறுமி ஒருவர் உட்பட இருவர் சிறிய காயங்களுக்குள்ளானார்கள்.

மரம் வீழ்ந்ததில் மின்கம்பிகள் சேதமடைந்ததால், பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வீடுகளின் பாதுகாப்பு கருதி மரத்தை வெட்டி அகற்ற முற்பட்டபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அனர்த்தத்தின்போது வீட்டில் உள்ளவர்கள் வெளியில் ஓடி உயிர்தப்பியுள்ளனர்.

மரம் வீழ்ந்ததில் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த தளபாடங்களும் சேதமடைந்துள்ளன.