தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொத்தம் 12 ரயில்கள் தற்காலிகமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
12 ரயில் மின் பெட்டிகள் இயக்கத்திலிருந்து அகற்றப்பட்டு திருத்தப்பணிகளுக்காக இரத்மலானையில் உள்ள ரயில் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையால் திருத்தப் பணிகள் தாமதமாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.