தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை 359 சிறைக்கைதிகள் ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இவர்களில் நால்வர் பெண்களாவர்.அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, கைதிகளுக்கு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சிறிய குற்றங்கள் மற்றும், சிறிய அபாராத தொகையைச் செலுத்த தவறியமை உள்ளிட்ட சிறைக்கைதிகள் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அதிகூடிய எண்ணிக்கையாக 46 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.மஹர சிறைச்சாலையில் இருந்து 32 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் இருந்து 30 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 29 கைதிகளும், வாரியபொல சிறையிலிருந்து 26 கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.