மகனை குத்திக் கொலை செய்த தந்தை

29 0

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின் மகனே​ உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.