திஸ்ஸமஹராமை, மஹசேன்புர பிரதேசத்தில் 14 கிலோ கிராம் அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் 6 சந்தேக நபர்கள் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹராமை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அம்பர் தொகைளின் மொத்த பெறுமதி 07 கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் அறுவரும் இந்த அம்பர் தொகையை விற்பனை செய்வதற்காக கண்டியிலிருந்து திஸ்ஸமஹராமை, மஹசேன்புர பிரதேசத்திற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமஹராமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.