மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

44 0

மது போதையில் சொகுசு பஸ் ஒன்றை செலுத்திச் சென்றதாக கூறப்படும் சாரதி ஒருவர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இந்த சொகுசு பஸ்ஸில் 22 பயணிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அந்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பஸ் ஒன்றிற்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்று (11) நுகேகொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.