10 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

41 0
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக  பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எஞ்சியிருக்கும் வாக்காளர் அட்டைகள் வரும் நாட்களில் வாக்காளர்களுக்கு விநியோக்கிக்கப்படும் எனவும், செப்டம்பர் 14ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்களர் அட்டை விநியோகத்தை நிறைவு செய்ய தபால் திணைக்களம்  எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய திகதிக்குள் எந்தவொரு வாக்காளரும் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள வில்லையென்றால், அவர்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் (NIC) தமது உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சென்று தமது அடையாளத்தைச் சரிபார்த்து, தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ரணசிங்க தெரிவித்தார்.