350 கைதிகளுக்கு விடுதலை

34 0

செப்டெம்பர் 12 ஆம் திகதி தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சிறிய குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவர்கள் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.