பதுளை – ரிதிமாலியத்த பகுதியில் 15 கிலோ மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

33 0

பதுளை, ரிதிமாலியத்த, கஸ்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் 15 கிலோ மான் இறைச்சியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிதிமாலியத்த, கஸ்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்படும் மான்களை இறைச்சிகளாக்கி விற்பனை செய்வதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, மான் இறைச்சி மற்றும் மானின் உடல் பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.