எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட 9 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்

30 0

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக இதுவரை ( ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை ) 09 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் சாகர காரியவசமும், சுயேட்சை வேட்பாளராக சுசிறி குணசுந்தர கஹவேவிதானவும், தேசிய மக்கள் சக்தி சார்பில் ரத்ன கமகே ஜனசெத பெரமுன சார்பில் புத்தரமுல்லே சீலரத்ன தேரரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பொலந்த ஹேவா ஜயந்த ஜயவீரவும், பொதுசன ஐக்கிய முன்னணி  சார்பில் மஹிந்த செனரத் பண்டாரவும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ்  சார்பில் நிருக்ஷ நன்த குமாரவும், ஸ்ரீ லங்கா கொமியூனிஸ்ட் கட்சி சார்பில் டப்ளியு.வீ. ஜகத் யுஷ்ப குமாரவும், பொதுசன ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் ரமேஷ் பத்திரணவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளுர்  அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயத்தின் ) 26 ஆம் பிரிவின் கீழ் எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர்,  உப தலைவர், மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்று புதன்கிழமையுடன் (11) நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.