ராசிமணல் அணை: பிரேமலதா வலியுறுத்தல்

29 0

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 வாரங்களுக்கு முன்மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேற்றப்பட்ட காவிரி உபரிநீர் கடலில் கலப்பதை சாதகமாக்கிக் கொண்டு, உடனடியாக மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசை, கர்நாடக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு கீழே புதிய அணைகள் கட்டி, உபரி நீரைத் தேக்கஇயலாது. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில், ராசிமணல் அருகே புதிய அணை கட்டி 63டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாறு தேக்கப்படும் நீரை மேட்டூர் அணை மூலமாகப் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவும், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்கவும் ராசிமணலில் அணை கட்ட வேண்டியது அவசியமாகும். இதற்கான பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் இதை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு பிரேமலதா தெரிவித்து உள்ளார்.