வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலுடன் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமை (10) மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில் புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரயில் பாதையில் நடந்து சென்ற பெண்ணுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்தார்.
உயிரிழந்தவர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .