வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த போது குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, வவுனியா பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன், அது மோட்டர் குண்டு என உறுதிப்படுத்தினர். விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.