கொழும்பு – கண்டி வீதியில் விபத்து: 20 பேர் காயம்!

24 0

கொழும்பு – கண்டி வீதியில் வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் பாரவூர்தி ஒன்றும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.