காணி தகராறு ; வாளால், பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பேர் காயம்

27 0

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் வாள் மற்றும் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.

காணி தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலின் போது, ஒரு தரப்பில் உள்ள இரு சகோதரர்களும் மற்றைய தரப்பில் உள்ள தாய் , தந்தை மற்றும் மகன் ஆகியோரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரு சகோதரர்களும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர்கள் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.