பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் அங்கிருந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் மசாஜ் நிலையத்தில் இருந்த ஐந்து பெண்களை அறையொன்றிற்குள் அடைத்து வைத்து அவர்களின் கைத்தொலைபேசிகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர், சந்தேக நபர்கள் அங்கிருந்த இரண்டு பெண்களை கடத்திச் சென்று, அவர்களை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், யக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.